வணிகம்

'ஏர்டெல் இணையசேவைக் கட்டணம் உயர்கிறது'

28th Feb 2023 10:14 PM

ADVERTISEMENT

 

பார்சிலோனா: பார்தி ஏர்டெல் நிறுவனமானது இந்த ஆண்டு மொபைல் போன் மற்றும் டேட்டா கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனர் மற்றும் தலைவரான சுனில் பார்தி மிட்டல் தெரிவித்துள்ளார்.

ஏர்டெல் நிறுவனம் கடந்த மாதம் அதன் குறைந்தபட்ச ரீசார்ஜான 28 நாள் மொபைல் போன் சேவையை சுமார் 57 சதவீதம் அதிகரித்து ரூ.155 என்று வழங்கத் தொடங்கியுள்ளது..

நிறுவனம் கடந்த மாதம் அதன் குறைந்தபட்ச ரீசார்ஜான 28 நாள் மொபைல் போன் சேவையை திட்டத்திற்கான ஆரம்ப விலையை எட்டு வட்டங்களில் சுமார் 57 சதவீதம் அதிகரித்து ரூ .155 ஆக உயர்த்தியது. 

ADVERTISEMENT

இது குறித்து மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நிகழ்வில் பேசிய மிட்டல், கட்டண உயர்வு விரைவில் நாடு முழுவதும் நடைபெறும் என்றார்.

ரீசார்ஜ் விலை உயர்வின் தாக்கம் குறித்து கேட்டபோது மக்கள் மற்ற விஷயங்களுக்கு செலவிடும் செலவுகளுடன் ஒப்பிடும்போது விலை உயர்வு குறைவாக உள்ளது. சம்பளம் உயர்ந்துள்ளது, வாடகை உயர்ந்துள்ளது யாரும் குறை சொல்லவில்லை.

நாட்டில் வலுவான தொலைத்தொடர்பு நிறுவனம் தேவை. இந்தியாவின் கனவு டிஜிட்டல் மயமாக்கல். அரசு விழிப்புடன் இருப்பதாக நான் நினைக்கிறேன், கட்டுப்பாட்டாளர் விழிப்புடன் இருக்கிறார். மக்களும் விழிப்புடன் உள்ளனர் என்றார் மிட்டல்.

வாடிக்கையாளர்களுக்காக வழங்கப்பட்டு வந்த குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டமான ரூ.99ஐ நிறுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏர்டெல் நிறுவனம்  வினாடிக்கு ரூ.2.5 பைசா என்ற விகிதத்தில் 200 எம்பி டேட்டா மற்றும் அழைப்புகளை வழங்கி வந்தது. 

பி.எஸ்.என்.எல் மற்றும் வோடபோன் ஐடியாவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் தொலைத்தொடர்பு துறை உள்கட்டமைப்பை ஆரோக்கியமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT