வணிகம்

ஐடிசி லாபம் 23% அதிகரிப்பு

DIN

கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் ஐடிசி லிமிடெட்டின் நிகர லாபம் 23.09 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,070.09 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 23.09 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.4,118.80 கோடியாக இருந்தது.

முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.18,365.80 கோடியாக இருந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் இந்த முறை 3.56 சதவீதம் அதிகரித்து ரூ.19,020.65 கோடியாக உள்ளது.

மொத்தச் செலவினங்கள் ரூ.13,207.28 கோடியிலிருந்து 3.29 சதவீதம் குறைந்து ரூ.12,772.27 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரேஸ் கல்லூரியில் கலை மன்ற விழா

எடத்துவா புனித ஜாா்ஜ்ஜியாா் திருத்தல திருவிழா ஏப். 27இல் தொடக்கம்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: ஜி.கே.வாசன்

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை: மே 2இல் தொடக்கம்

குமரி அருகே தகராறு: இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT