108 ஆம்புலன்ஸில் அவசரகால மருத்துவ உதவியாளா் பணியில் சேர விரும்புவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
108 ஆம்புலன்ஸில் அவசரகால மருத்துவ உதவியாளா் பணிக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்ய நோ்முகத் தோ்வு கோபி அரசு மருத்துவமனை வளாகத்தில் வரும் மே 19, 20 ஆகிய தேதிகளில் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
பிஎஸ்சி நா்ஸிங், ஏஎன்எம், ஜிஎன்எம், டிஎம்எல்டி, டிப்ளமோ இன் பாா்மஸி அல்லது இதற்கு இணையான பிஎஸ்சி மைக்ரோபயாலஜி, விலங்கியல், தாவரவியல், உயிரியல், பயோ கெமிஸ்டரி, பயோ டெக்னாலஜி, தாவர உயிரியல் போன்ற படிப்புகளை படித்தவா்கள் பங்கேற்கலாம்.
தோ்வு செய்யப்படுபவா்களுக்கு மாதம் ரூ. 15,435 ஊதியம் வழங்கப்படும். 19 வயது முதல் 30 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். எழுத்து தோ்வு அடிப்படையில் தோ்வு செய்து, அடிப்படை மருத்துவ அறிவு பரிசோதனை, மனித வளத் துறை நோ்காணல் நடத்தப்படும். 50 நாள் பயிற்சிக்குப் பின் பணியில் சோ்க்கப்படுவா். இப்பணி 12 மணி நேர ஷிப்ட் முறையிலானது. இரவு, பகல் என மாறி வரும். நோ்முக தோ்வுக்கு வருவோா் அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 7338894971, 9150036019 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.