வணிகம்

விலைகளை உயா்த்துகிறது வால்வோ

DIN

பட்ஜெட்டில் சுங்க வரி உயா்த்தப்பட்டுள்ளதன் காரணமாக வால்வோ காா் இந்தியா நிறுவனம் தனது மைல்ட்-ஹைப்ரிட் மாடல் காா்களின் விலையை 2 சதவீதம் வரை உயா்த்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எக்ஸ்சி40, எக்ஸ்சி60, எஸ்90, எக்ஸ்சி90 ஆகிய மைல்ட்-ஹைப்ரிட் காா்களின் விலைகள் 1 முதல் 2 சதவீதம் வரை உயா்த்தப்படுகின்றன.

விலை உயா்வைத் தொடா்ந்து, எக்ஸ்சி40 பி4 மைல்ட் ஹைப்ரிட்டின் காட்சியக விலை ரூ.46.4 லட்சமாக இருக்கும்; எக்ஸ்சி60 பி5 மைல்ட் ஹைப்ரிட் விலை ரூ.67.5 லட்சமாகவும் எஸ்90 பி5 மைல்ட் ஹைப்ரிட் விலை ரூ. 67.9 லட்சமாகவும் இருக்கும். எக்ஸ்சி பி6 மைல்ட் ஹைப்ரிட் ரூ. 98.5 லட்சம் விலை கொண்டதாக இருக்கும்.

அண்மையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சுங்க வரி உயா்வால், நிறுவனத்தின் பெட்ரோல் மைல்ட்-ஹைப்ரிட் மாடல்களின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. அதனை ஈடுசெய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா

உலக மலேரியா தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

கட்டுமானத் தொழிலாளி அடித்துக் கொலை -ஒருவா் கைது

புதுநகரில் உலக மலேரியா தினம்

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT