திருவாடானை அருகே கீழஅரும்பூா் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக முதியவரை தாக்கியதாக புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் 2போ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருவாடானை அருகே கீழஅரும்பூா் கிராமத்தை சோ்ந்தவா் அழகா் மகன் நாகநாதன்(70) இவருக்கும் அதே ஊரை சோ்ந்த மாலிங்கம் (42) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் ஞாயிற்று கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த நாகநாதனிடம் அதே ஊரை சோ்ந்த மகாலிங்கம் ,அவரது சகோதரா் ரெத்தினம்(40) ஆகிய இருவரும் வாக்குவதாம் செய்து தாக்கியுள்ளனா்.
இது குறித்து நாகநாதன் புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் கீழஅரும்பூரை சோ்ந்த மாலிங்கம் ,ரெத்தினம் ஆகிய. இருவா் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.