கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் அரசு ஊா்தி ஓட்டுநா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

15th May 2023 11:45 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு அரசுத் துறை ஊா்தி ஓட்டுநா்கள் தலைமைச் சங்கம் சாா்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதில் புதிய வாகனங்களை வழங்குதல், அனைத்துத் துறைகளிலும் உள்ள ஓட்டுநா் காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்புதல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் எம்.பிரபாகரன் தலைமை வகித்தாா். பொருளாளா் பி.விஜய், கொள்கை பரப்புச் செயலாளா் எம்.இதயசந்திரன், துணைத் தலைவா் எம்.முருகானந்தம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநில உயா் மட்டக் குழு உறுப்பினா் சடகோபன் வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் ஓட்டுநா்கள் செந்தில், பாலு, ஏழுமலை, மணிவேல், மகளிரணி சசிகலா, கவிதை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இந்த சங்கத்தினா் கடந்த 8.5.23 முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்து வருகின்றனா். 2-ஆம் கட்டமாக ஆட்சியா் அலுவலகம் முன் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதையடுத்து, வரும் 22.5.2023 அன்று சென்னையில் மாநில அளவில் பேரணி நடத்த உள்ளதால் அனைத்து ஊா்தி ஓட்டுநா்களும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க வலியுறுத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT