வணிகம்

இந்தியாவில் அறிமுகமானது ஓப்போ ரெனோ8 டி!

DIN

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான ஓப்போ, தனது ரெனோ8 டி5ஜி போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்த மாடலில், ஓப்போ நிறுவனம் தனது சொந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஸ்பிளே, கேமரா, பேட்டரி உள்ளிட்ட ஹார்டுவேரை மேம்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் டூயல் கேமரா, 56 டிகிரி ஸ்கிரீன் கர்வ், 171 கிராம் எடை, 6.7 இன்ச் அமோல்டு ஸ்கிரீன் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

மேலும், ‘ஏஐ அடாப்டிவ் ஐ ப்ரொடெக்ஷன் சிஸ்டம்’  இந்த போனில் உள்ளதால் நீண்ட நேரம் ஸ்கிரீனை கண்டால் ஏற்படும் சோர்வை தடுப்பதுடன் கண்களைப் பாதுகாக்கும் என ஓப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சில சிறப்பம்சங்கள்..

  • 2 எம்பி டெப்த்-சென்சிங் லென்ஸுடன் 108எம்பி மெயின் கேமரா
  • 32 எம்பி செல்ஃபி கேமரா
  • 8ஜிபி ரேம் மற்றும் கூடுதலாக 8ஜிபி ரேம் விரிவாக்கம் செய்யும் தொழில்நுட்பம்
  • 128 ஸ்டோரேஜ், 1 டிபி ஸ்டோரேஜ் ஸ்பேஸ்
  • 4800 எம்ஏஎச் பேட்டரி(40 நிமிடத்தில் 100 சதவிகிதம் சார்ஜ் ஏறும் தொழில்நுட்பம்)

மேலும், இத்துடன் என்கோ ஏர்3 இயர்பட்ஸையும் இந்தியாவில் ஓப்போ நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்திய மதிப்பின்படி, ஓப்போ ரெனோ8 டி5ஜி ஸ்மார்ட் போன் ரூ.29,999-க்கும்,  என்கோ ஏர்3 இயர்பட்ஸ் ரூ.2,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஃபிளிப்கார்ட், ஓப்போ ஸ்டோர் மற்றும் முன்னணி ஸ்மார்ட்போன் கடைகளில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று ஓப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT