வணிகம்

ஏறுமுகத்தில் அதானி குழும நிறுவனப் பங்குகள்

7th Feb 2023 12:43 PM

ADVERTISEMENT


புது தில்லி: தொடர்ச்சியாக எட்டு நாள்களுக்குப் பின் அதானி குழுமத்தின் பெரும்பாலான நிறுவனப் பங்குகள் செவ்வாய்க்கிழமை காலை ஏறுமுகத்தில் வணிகமாகின.

அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்து வணிகமானது.

இதையும் படிக்க.. பழைய வரி - புதிய வரி: எந்த முறை உங்களுக்கு சிறந்தது?

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கமான வணிகத்துக்கு இடையே, அதானி குழுமத்தின் எட்டு நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகளும் இன்று காலை உயர்வுடன் வணிகமான நிலையில், இரண்டு நிறுவனப் பங்குகள் மட்டும் சரிவைக் கண்டன.

ADVERTISEMENT

மும்பை பங்குச் சந்தையில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகள் 15 சதவீதம் உயர்ந்து ரூ.1,808.25 என்ற அளவில் வணிகமானது. இதன் சந்தை மதிப்பானது ரூ.2.06 லட்சம் கோடி.

இதையும் படிக்க.. கேரளத்தில் முதல் முறை.. தாயாகியிருக்கும் திருநம்பி

அத்வானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் 8.96 சதவிகிதம் உயர்ந்து ரூ.595க்கு வணிகமானது. இதனால் சந்தை மதிப்பு ரூ.1.28 லட்சம் கோடியானது.

அதானி வில்மர் 5 சதவிகிதம் உயர்ந்து ரூ.399.40 ஆகவும், அதானி டிரான்ஸ்மிஷன் 5 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,324 ஆகவும் ஆதானி க்ரீன் எனர்ஜி 2.10 சதவிகிதம் உயர்ந்து ரூ.906.15 ஆகவும் வணிகமாகின.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT