வணிகம்

சென்செக்ஸ் 334 புள்ளிகள் வீழ்ச்சியுடன் முடிவு!

DIN

மும்பை: பங்குச் சந்தையில் கரடியின் ஆதிக்கம் தென்பட்டதால் இன்றைய வர்த்தகம் சரிவில் முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 334.98 புள்ளிகளை இழந்து 60,506.90ல் நிலைபெற்றது. 

இது தவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளதால் இது உள்நாட்டு பங்குச்சந்தைகள் மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய வர்த்தகத்தில் 500 புள்ளிகளை இழந்த பிறகு, 30-பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீடு 334.98 புள்ளிகள் இழந்து 60,506.90ல் நிலைபெற்றது. அதே நேரத்தில் தேசிய பங்குச் சந்தை 89.45 புள்ளிகள் சரிந்து 17,764.60 ஆக முடிந்தது.

டாடா ஸ்டீல் 2.08 சதவீதம் சரிவுடன் வர்த்தகமானது. அதே வேளையில் கோடக் வங்கி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, எம்&எம், அல்ட்ரா சிமென்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களும் தொடர்ந்து நஷ்டமடைந்தது. மறுபுறம், இண்டஸ்இந்த் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பவர்கிரிட் மற்றும் ஐடிசி ஆகியவை பங்குகள் லாபத்தில் முடிவடைந்தது.

ஆசியாவின் மற்ற இடங்களில், ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கில் பங்குச் சந்தைகள் சரிந்து முடிவடைந்தது. அதே நேரத்தில் டோக்கியோ மற்றும் சியோலில் பங்குச் சந்தைகள்  உயர்ந்து முடிந்தன.

சர்வதேச கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 0.09 சதவீதம் உயர்ந்து 80.01 அமெரிக்க டாலராக முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT