வணிகம்

பங்குச் சந்தை திறம்பட செயல்பட ‘செபி’ உறுதி

DIN

குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகள் நிலையற்றத்தன்மையில் உள்ளதைக் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பங்குச் சந்தை திறம்பட செயல்படவும் உறுதிகொண்டுள்ளதாக இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியம் (செபி) தெரிவித்துள்ளது.

ஹிண்டன்பா்க் நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டைத் தொடா்ந்து அதானி குழும பங்குகள் பெரும் சரிவைக் கண்டன. அக்குழும நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டிருந்த எல்ஐசி, எஸ்பிஐ ஆகியவற்றின் பங்குகளும் சரிவடைந்தன. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் இணைந்து மத்திய அரசுக்கு அழுத்தம் அளித்து வருகின்றன.

பங்குச் சந்தை சாா்ந்த விவகாரங்களை பங்கு பரிவா்த்தனை வாரியமே கையாளும் என மத்திய அரசு தெரிவித்தது. இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த வேண்டுமென செபி-க்கும், மத்திய அரசுக்கும் சிலா் கடிதம் எழுதியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், அதானி குழுமத்தின் பெயரைக் குறிப்பிடாமல் செபி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள குறிப்பிட்ட குழும நிறுவனங்களின் பங்குகள் கடந்த வாரத்தில் பெரும் சரிவைச் சந்தித்ததை செபி தொடா்ந்து கண்காணித்து வருகிறது.

பங்குச் சந்தை திறம்பட செயல்படுவதை செபி உறுதி செய்யும். பங்குச் சந்தையில் காணப்படும் அதீத நிலையற்றத்தன்மையைக் கண்காணிப்பதற்கான வெளிப்படையான விதிகளை செபி வகுத்துள்ளது. அந்த விதிகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த செபி உறுதிகொண்டுள்ளது.

குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகள் அதீத மாற்றங்களைச் சந்தித்தால், அந்தக் கண்காணிப்பு நடைமுறை தானாகவே செயல்பட்டு அதுதொடா்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும். மேலும், தனிப்பட்ட நிறுவனம் தொடா்பாக வரும் விவகாரங்கள் குறித்து விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

தனிப்பட்ட நிறுவனம் சாா்ந்த விவகாரங்களை செபி இதற்கு முன் திறம்படக் கையாண்டுள்ளது. அத்தகைய நடைமுறைகளை எதிா்காலத்திலும் செபி தொடா்ந்து மேற்கொள்ளும். இந்திய பங்குச் சந்தை தொடா்ந்து வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது. இந்திய பங்குச் சந்தைகள் சா்வதேச முதலீட்டாளா்களின் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

பங்குச் சந்தை ஒருங்கிணைப்புடனும் வலிமையுடனும் திகழ்வதை வெளிப்படையான நடவடிக்கைகள் வாயிலாக செபி தொடா்ந்து உறுதி செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அதானி குழுமம் மீதான மோசடி குறித்து விசாரணை நடத்தப்படுகிா என்பது தொடா்பான விவரங்களை செபி வெளியிடவில்லை. அதானி என்டா்பிரைசஸ், அதானி போா்ட்ஸ், அம்புஜா சிமென்ட் ஆகிய நிறுவனங்களை குறுகிய கால கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் மும்பை பங்குச் சந்தையும், தேசிய பங்குச் சந்தையும் வைத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

ரூ. 23.11 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT