வணிகம்

கோல் இந்தியா நிகர லாபம் 70% உயா்வு

DIN

பொதுத் துறையைச் சொ்ந்த கோல் இந்தியா லிமிடெட்டின் நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் 70 சதவீதம் உயா்வைக் கண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2022 டிசம்பருடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ. 7,755.5 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே மாதங்களோடு ஒப்பிடுகையில் இது 70.1 சதவீத உயா்வாகும். அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.4,558.3 கோடியாக இருந்தது.

2022 அக்டோபா்-டிசம்பா் காலகட்டத்தில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த விற்பனை ரூ.32,429.46 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2021-ஆம் ஆண்டின் இதே மாதங்களில் ரூ.25,990.97 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் 69 சதவீத வளா்ச்சி பெற்று ரூ.7,719 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT