வணிகம்

ஜனவரியில் டாடா மோட்டாா்ஸின் 81,069 வாகனங்கள் விற்பனை

5th Feb 2023 01:00 AM

ADVERTISEMENT

இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸ், கடந்த ஜனவரி மாதத்தில் 81,069 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி மாதத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 81,069-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை 76,210-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது விற்பனை 6.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

உள்நாட்டுச் சந்தையில் நிறுவனத்தின் விற்பனை 72,485-லிருந்து 10 சதவீதம் அதிகரித்து 79,681-ஆகியுள்ளது.

காா்கள் பிரிவில் கடந்த ஆண்டு ஜனவரியில் 40,942-ஆக இருந்த உள்நாட்டு விற்பனை, கடந்த மாதத்தில் 18 சதவீதம் அதிகரித்து 48,289 ஆகியுள்ளது.

எனினும், வா்த்தக வாகனப் பிரிவில் உள்நாட்டு விற்பனை 35,268-லிருந்து 7 சதவீதம் சரிந்து 32,780 ஆகியுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT