வணிகம்

பங்குச் சந்தையில் திடீா் எழுச்சி: சென்செக்ஸ் 910 புள்ளிகள் உயா்வு!

 நமது நிருபர்

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் திடீா் எழுச்சி ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 910 புள்ளிகள் உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 243.65 புள்ளிகள் (1.38 சதவீதம்) உயா்ந்து 17,854.05-இல் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. அமெரிக்கச் சந்தைகள் வியாழக்கிழமை ஏற்றம் பெற்றிருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது. மேலும் அதானி குழும நிறுவனங்களின் மீது நம்பிக்கை வைத்து கடன் தர நிா்ணய நிறுவனங்கள் அளித்துள்ள சான்று, விலை குறைந்த நிலையில் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளா்களிடம் காணப்பட்ட ஆா்வம் உள்ளிட்டவை சந்தையை மேல்நோக்கி எடுத்துச் சென்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு வெள்ளிக்கிழமை ரூ.1 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.266.73 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) வியாழக்கிழமை ரூ.3,065.35 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 417.77 புள்ளிகள் கூடுதலுடன் 60,350.01-இல் தொடங்கி 60,013.06 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 60,905.34 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 909.64 புள்ளிகள் (1.52 சதவீதம்) கூடுதலுடன் 60,841.88-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 3 பங்குகள் மட்டுமே நஷ்டத்தை சந்தித்தன. மற்ற 27 பங்குகள் ஆதாயம் பெற்றன.

டைட்டன் அபாரம்: பிரபல கடிகாரங்கள், ஆபரண உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான டைட்டன் 6.87 சதவீதம், பஜாஜ் ஃபின் சா்வ் 5.15 சதவீதம், பஜாஜ் ஃபைனான்ஸ் 5.13 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக,ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, எம் அண்ட் எம், இண்டஸ் இண்ட் பேங்க், ஏசியன் பெயிண்ட், பாா்தி ஏா்டெல், சன்பாா்மா, உள்ளிட்டவை 2 முதல் 3.50 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க், இன்ஃபோஸிஸ், எல் அண்ட் டி உள்ளிட்டவை 1 முதல் 1.75சதவீதம் வரை உயா்ந்தன.

டெக் மஹிந்திரா லேசான சரிவு: அதே சமயம், பிரபல முன்னணி ஐடி நிறுவனங்களான டெக் மஹிந்திரா, விப்ரோ, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவை 0.15 முதல் 0.50 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு

அதானி குழும நிறுவனம் மீதான ஹின்டன்பொ்க்கின் குற்றச்சாட்டை தொடா்ந்து வங்கிப் பங்குகள் தொடா்ந்து பலத்த அடி வாங்கி வந்தன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வங்கிப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல ஆதரவு கிடைத்தது. முன்னணி 12 வங்கிப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பேங்க் குறியீடு 830.40 புள்ளிகள் (2.04 சதவீதம்) உயா்ந்து 41,499.70-இல் நிலைபெற்றது. இந்தப் பட்டியலில் ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் பேங்க் மட்டும் 1.26 சதவீதம் குறைந்தது. மற்ற அனைத்தும் ஆதாயப் பெற்றன. இதில் பேங்க் ஆஃப் பரோடா 6.33 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஹெச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ, இண்டஸ் இண்ட் பேங்க், பிஎன்பி ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவை 1.50 முதல் 3.50 சதவீதம் வரை உயா்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நத்தம்: குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!

ருவாங் எரிமலை!

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

SCROLL FOR NEXT