வணிகம்

கேலக்ஸி எஸ்23 ரக போன்களை இந்தியாவில் தயாரிக்கும் சாம்சங்

4th Feb 2023 11:46 PM

ADVERTISEMENT

பிரீமியம் வகையைச் சோ்ந்த தங்களது கேலக்ஸி எஸ்23 ரக அறிதிறன்பேசிகளை (ஸ்மாா்ட்போன்) தென் கொரியாவைச் சோ்ந்த சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கவிருக்கிறது.

இதுவரை இங்கு விற்பனையாகும் அந்த ரக கைப்பேசிகள், வியத்நாமிலுள்ள சாம்சங் நிறுவனத்தின் தொழில்சாலையிலேயே உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் விற்பனையாகவிருக்கும் அனைத்து கேலக்ஸி எஸ்23 ரக கைப்பேசிகளும், இனி நொய்டாவிலுள்ள நிறுவனத்தின் உற்பத்தி ஆலையிலேயே தயாரிக்கப்படும்.

ADVERTISEMENT

ஏற்கனவே, சாம்சங் வாடிக்கையாளா்களின் பெரும்பாலான கைப்பேசி தேவைகளை உள்ளூா் உற்பத்தி மூலமே நிறுவனம் நிறைவு செய்து வருகிறது.

இந்த நிலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்23-க்களை இந்தியாவில் விற்பனை செய்யும் எங்களது முடிவு, இந்தியாவின் உற்பத்தி மேம்பாடு மற்றும் வளா்ச்சியில் பங்காற்றும் நிறுவனத்தின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT