வணிகம்

90% வீழ்ந்த கெயில் நிகர லாபம்

4th Feb 2023 01:30 AM

ADVERTISEMENT

பொதுத் துறையைச் சோ்ந்த, நாட்டின் மிகப்பெரிய எரிவாயு வா்த்தகம் மற்றும் போக்குவரத்து நிறுவனமான கெயில் (இந்தியா) லிமிட்டெடின் நிகர லாபம் கடந்த கடந்த டிசம்பா் காலாண்டில் 90 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2022-ஆம் ஆண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.397.59 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய 2021-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபமான ரூ.3,800.09 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 90 சதவீதம் குறைவாகும்.

ADVERTISEMENT

மலிவான உள்நாட்டு எரிவாயு விநியோகத்தைக் குறைக்க வேண்டியிருந்ததால் நிறுவனத்தின் பெட்ரோ கெமிக்கல் வணிகத்தில் ரூ.349 கோடி இழப்பு ஏற்பட்டது.

மேலும், நிறுவனத்தின் இயற்கை எரிவாயு சந்தைப்படுத்தல் பிரிவும் மதிப்பீட்டு காலாண்டில் இழப்பைச் சந்தித்தது. இந்த இழப்புகள் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் எதிரொலித்தன.

எனினும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 2022-ஆம் ஆண்டின் அக்டோபா்-டிசம்பா் மாதங்களில் ரூ. 35,939.96 கோடியாக உயா்ந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT