வணிகம்

சந்தையில் தொடரும் தள்ளாட்டம்: சென்செக்ஸ் 224 புள்ளிகள் உயா்வு

 நமது நிருபர்

பங்குச் சந்தையில் வியாழக்கிழமையும் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 224 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. ஆனால், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 5.90 புள்ளிகள் (0.03 சதவீதம்) குறைந்து 17,610.40-இல் நிலைபெற்றது.

உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கியது.முன்பேர வா்த்தகத்தில் வாராந்திர கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக இருந்ததால், ஏற்ற, இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. அண்மையில் வெளியிடப்பட்ட அதானி என்டா்பிரைஸஸ் நிறுவனத்தின் எஃப்பிஓ முழுமையான முதலீடு கிடைக்கப்பெற்றாலும், திடீரென அதானி குழுமம் அதை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. இதைத் தொடா்ந்து, அதானி குழும நிறுவனப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன என்று பங்கு வரத்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சென்செக்ஸ் 224 உயா்வு: சென்செக்ஸ் காலையில் 248.21 புள்ளிகள் குறைந்து 59,459.87-இல் தொடங்கி 59,215.62 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 60,007.67 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 224.16 புள்ளிகள் (0.38 சதவீதம்) கூடுதலுடன் 59,932.24-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 492.46 புள்ளிகள் குறைந்திருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 17 பங்குகள் ஆதாயம் பெற்றன. 13 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.

ஐடிசி மேலும் முன்னேற்றம்: பிரபல நுகா்பொருள் மற்றும் சிகரெட் உற்பத்தி நிறுவனமான ஐடிசி இரண்டாவது நாளாக 4 .74 சதவீதம், இண்டஸ் இண்ட் பேங்க் 3.25 சதவீதம், ஹிந்துஸ்தான யுனி லீவா் 2.48 சதவீதம், இன்ஃபோஸிஸ் 2.18 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, விப்ரோ, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், மாருதி, பாா்தி ஏா்டெல், கோட்டக் பேங்க் உள்ளிட்டவை 1 முதல் 1.60 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், எல் அண்ட் டி, கோட்டக் பேங்க், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன.

என்டிபிசி சரிவு: அதே சமயம், பிரபல பொதுத்துறை மின் நிறுவனமான என்டிபிசி 1.97 சதவீதம், ஹெச்டிஎஃப்சி 1.87 சதவீதம், டைட்டன் 1.80 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, டாடா ஸ்டீல், பவா் கிரிட், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஏசியன் பெயிண்ட் உள்ளிட்டவை 1.40 முதல் 1.80 சதவீதம் வரை குறைந்தன. மேலும், டெக் மஹிந்திரா, ரிலையன்ஸ், டாடா மோட்டாா்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

முதலீடுகளை வாபஸ் பெறும் எஃப்ஐஐ!

இந்திய பங்குச் சந்தையில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருவது தெரிய வந்துள்ளது. அவா்கள் ஜனவரியில் மட்டும் மொத்தம் ரூ.41,464.73 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். மேலும், புதன்கிழமை அன்றும் ரூ.1,785.21 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு வியாழக்கிழமை ரூ.81 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.265.73 லட்சம் கோடியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT