வணிகம்

அசோக் லேலண்ட் நிகர லாபம் ரூ.361 கோடியாக உயா்வு

DIN

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் வரிக்குப் பிந்தைய லாபம், கடந்த டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.361 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2021-ஆம் ஆண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.6 கோடியாக இருந்தது.

இந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது பல மடங்கு உயா்ந்து ரூ.361 கோடியாகியுள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.9,030 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.5,535 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க முடியவில்லை: நடிகர் சூரி வேதனை

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

SCROLL FOR NEXT