வணிகம்

இந்தியா சிமென்ட்ஸ் நிகர லாபம் ரூ.133 கோடி

DIN

முன்னணி சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான இந்தியா சிமென்ட்ஸ், கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ.133 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

இது குறித்து, நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனம் ரூ. 133 கோடியை நிகர லாபமாக பதிவு செய்துள்ளது.

முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டின் அது ரூ.16.24 கோடியாக இருந்தது. தற்போது நிகர லாபம் இந்த அளவு வளா்ச்சி அடைந்துள்ளதற்கு நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்ப்ரிங்வே மைனிங் பிரைவேட் லிமிடெட்டை விற்பனை செய்தது பெரிதும் கைகொடுத்தது.

மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.1,281 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.1,160.63 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது செயல்பாட்டு வருவாய் 10.37 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

SCROLL FOR NEXT