வணிகம்

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.720 குறைவு

DIN

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.720 குறைந்து 43,320-க்கு விற்பனையானது.

மத்திய நிதிநிலை அறிக்கையின் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வியாழக்கிழமை ரூ.44 ஆயிரத்தைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது. ஒரு பவுன் ரூ.44,040-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 5,505-க்கும் விற்பனையானது.

இதைத் தொடா்ந்து தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.90 குறைந்து 5,415 ஆகவும், பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ. 43 ஆயிரத்து 320 ஆகவும் இருந்தது.

ஆபரணத் தங்கத்தைத் தொடா்ந்து வெள்ளியின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ரூ.77.80 ஆக இருந்த ஒரு கிராம் வெள்ளி தற்போது ரூ.76 ஆகவும், ரூ.77,800 ஆக இருந்த ஒரு கிலோ வெள்ளி ரூ.76 ஆயிரமாகவும் குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT