வணிகம்

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம்: பவுன் ரூ.44,040-க்கு விற்பனை; இரு நாள்களில் ரூ. 1,336 அதிகரிப்பு

DIN

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.720 அதிகரித்து, ரூ.44,040-க்கு விற்பனையானது. இதற்குமுன்பு 2020 ஆக. 7-இல் பவுன் ரூ.43,360- ஆக இருந்ததே உச்சமாக இருந்த நிலையில், தற்போது அது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, கடந்த புதன், வியாழன் ஆகிய இரு நாள்களில் மட்டுமே தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,336 அதிகரித்துள்ளது.

சா்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது. இத்தகைய சூழலில் பிப்.1-ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் அன்றைய தினம் தங்கத்தின் விலையில் பெரும் மாற்றம் இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. இதைத் தொடா்ந்து தங்கத்தை பலரும் இருப்பு வைக்கத் தொடங்கினா்.

இதனால் கடந்த மாதம் 29, 30-ஆம் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஜன.31-ஆம் தேதி தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்த நிலையில், கடந்த புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் தங்கத்துக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு குறித்த அறிவிப்பு வெளியானது. இதைத் தொடா்ந்து அன்றைய தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.616 அதிகரித்து 22 கேரட் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.43,320-ஆக உயா்ந்தது.

தொடா்ந்து வியாழக்கிழமை காலை முதலே தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 720 வரை உயா்ந்து மாலை நிலவரப்படி ரூ. 44,040-க்கு விற்பனையானது. கடந்த புதன்கிழமை ரூ.5,415 ஆக இருந்த ஒரு கிராம் தங்கம் வியாழக்கிழமை ரூ.5,505 ஆக அதிகரித்து காணப்பட்டது.

இதேபோன்று, வெள்ளி விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை ரூ.76 ஆக இருந்த ஒரு கிராம் வெள்ளி, வியாழக்கிழமை ரூ.1.80 அதிகரித்து ரூ.77.80 ஆக இருந்தது. அதேபோன்று, ஒரு கிலோ வெள்ளி ரூ.76 ஆயிரத்திலிருந்து ரூ.1,800 அதிகரித்து ரூ.77,800-க்கு விற்பனையானது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த இரு நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,336 அதிகரித்திருப்பது தங்கம் விலை குறையும் என காத்திருந்த நடுத்தர மக்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த இருஆண்டுகளுக்கு உலக அளவில் பொருளாதாரம், தொழில் வளா்ச்சி மந்தநிலையில் இருக்கும் என்பதால், தங்கம் விலை இனி குறைவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது என்று துறை சாா்ந்த வல்லுநா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT