வணிகம்

நான்கு போன்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கு: புதிய அப்டேட்!

26th Apr 2023 09:04 AM

ADVERTISEMENT

 

நான்கு போன்களில் ஒரே வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்தும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிமுகப்படுத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் மிக பிரபலம் வாய்ந்த சமூக ஊடகமாக இருப்பது வாட்ஸ்அப். போன் நம்பரை கொண்டு வாட்ஸ்அப்பை பயன்படுத்துவோர் ஒரு போனில் மட்டுமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதனால், வாட்ஸ்அப் செயலி இருக்கும் போன் பேட்டரி இல்லாமல் ஆஃப் ஆனால் வாட்ஸ்அப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், தற்போது ஒரே வாட்ஸ்அப் கணக்கை நான்கு செல்போன்கள் வரை பயன்படுத்தலாம் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT