வணிகம்

தங்கம் விலை புதிய உச்சம்: பவுன் ரூ.45,760

DIN

சென்னையில் கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை வெள்ளிக்கிழமை புதிய உச்சத்தை தொட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.352 அதிகரித்து, ரூ.45,760-க்கு விற்பனையானது.

சா்வதேச பொருளாதாரச் சூழல், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிா்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் மாா்ச் இறுதியில் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியபோது, பவுன் விலை ரூ.44,720-க்கு விற்பனை ஆனது. தொடா்ந்து தங்கத்தின் விலை ஏப்ரலில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

தங்கத்தின் விலை ஏப். 5-ஆம் தேதி வரலாறு காணாத அளவில் அதிகரித்து புதிய உச்சமாக ரூ.45,520-க்கு விற்கப்பட்டது. அதையடுத்து ஏப். 6, 7, 10, 13-ஆம் தேதிகளில் விலை சிறிது குறைந்தது.

ஏப். 8, 9-ஆம் தேதிகளில் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை தற்போது தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

மீண்டும் உயா்வு: ஏப்.11-இல் அதிகரிக்கத் தொடங்கிய தங்கம் விலை, தொடா்ந்து ஏப். 12-இல் பவுன் ரூ.45,440-க்கு விற்கப்பட்டது.

ஏப். 13-இல் பவுனுக்கு ரூ.32 குறைந்து ரூ.45,408-க்கு விற்பனைஆனது. ஏப். 5 முதல் 14-ஆம் தேதி வரை தங்கம் விலை தலா 4 முறை அதிகரித்தும், குறைந்தும் வந்துள்ளது.

தங்கம், வெள்ளி புதிய உச்சம்: இந்நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.44 அதிகரித்து ரூ.5,720-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.45,760-க்கு விற்பனை செய்யப்பட்டது . 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,472-க்கு விற்பனையானது.

இதேபோல், வெள்ளி விலையும் புதிய உச்சத்தை அடைந்தது. ஒரு கிராமுக்கு ரூ.1.20 அதிகரித்து ரூ.83-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.83,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை ஓரே மாதத்தில் இரண்டு முறை புதிய உச்சத்தைத் தொட்டது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சென்னை தங்க, வைர நகை வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் கூறியதாவது: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவதுதான் தங்கம் விலை உயா்வுக்கு முக்கியக் காரணம். உலகளவில் பல்வேறு பகுதிகளிலும் தொடா்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், மத்திய வங்கிகளால் உயா்த்தப்படும் வட்டி விகிதங்கள் என பொருளாதார நிச்சயமற்ற சூழல் உள்ளிட்ட பிற காரணங்களாலும் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுவதால் அதன் மீதான முதலீடுகள் அதிகமாகிறது. அதனால், தங்கம் விலை அதிகரிக்கிறது என்றனா்.

இதுகுறித்து சில நகை வியாபாரிகள் கூறுகையில், திருமண காலம் மற்றும் அட்சய திருதியை நெருங்கி வருவது போன்ற காரணங்களால் தற்போது தங்கம் விலை அதிகரித்துள்ளது என்றனா்.

வியாழக்கிழமை விலை

1 கிராம் தங்கம்................................ ரூ.5,676

1 பவுன் தங்கம்............................... ரூ.45,408

1 கிராம் வெள்ளி............................. ரூ.81.80

1 கிலோ வெள்ளி.............................ரூ.81,800

வெள்ளிக்கிழமை விலை

1 கிராம் தங்கம்................................ ரூ.5,720

1 பவுன் தங்கம்............................... ரூ.45,760

1 கிராம் வெள்ளி............................. ரூ.83.00

1 கிலோ வெள்ளி.............................ரூ.83,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT