வணிகம்

ஸ்மார்ட்போன் திருட்டு: புதிய விதியைக் கொண்டு வந்த மத்திய அரசு!

28th Sep 2022 01:39 PM

ADVERTISEMENT

இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் திருட்டுகளையும் திருடப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தவறாகப் பயன்படுத்துவதையும் தடுக்கும்பொருட்டு மத்திய அரசு புதிய விதியை கொண்டு வந்துள்ளது. 

அதன்படி, இந்தியாவில் தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் விற்பனைக்கு வைக்கப்படுவதற்கு முன்பு அதன் ஐ.எம்.இ.ஐ.(IMEI) என்ற தனித்துவமான எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. 

மத்திய அரசின் இந்திய போலி சாதனக் கட்டுப்பாட்டு அமைப்பின்(ICDR) அதிகாரபூர்வ இணையதளமான https://icdr.ceir.gov.inல் மொபைல் உற்பத்தியாளர்கள் தாங்கள் தயாரிக்கும் மற்றும் இறக்குமதி செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனின் ஐஎம்இஐ எண்ணை பதிவு செய்வதை கட்டாயமாக்கியுள்ளது. வருகிற 2023, ஜனவரி 1 முதல் இது அமலுக்கு வருகிறது. 

இதையும் படிக்க | செங்கல் சூளைகளில் ஆப்கன் குழந்தைகள்! (புகைப்படங்களுடன்)

ADVERTISEMENT

இதன்மூலமாக டிஜிட்டல் மூலமாக ஸ்மார்ட்போன்களின் ஐஎம்இஐ எண்ணை நிர்வகிக்க முடியும் என்றும் போலி ஸ்மார்ட்போன்கள் விற்பனையையும் திருடப்பட்ட ஸ்மார்ட்போன்களை கண்டுபிடிக்கவும் அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை கூறியுள்ளது. 

மேலும் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்யலாம் என்றும் இதற்கென எந்த முகவரையும் நீங்கள் அணுகத் தேவையில்லை என்றும் அவ்வாறு பதிவு செய்யாத ஸ்மார்ட்போன்கள் சந்தையில் விற்பனை செய்யபட்டால் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. 

ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கென தனித்துவமான ஐஎம்இஐ (IMEI) எண் உள்ளது. உங்கள் போனின் ஐஎம்இஐ எண்ணைப் பெற *#06# ஐ டயல் செய்யுங்கள். ஒரு போனில் இரண்டு சிம் உபயோகித்தால் இரண்டு ஐஎம்இஐ எண்கள் இருக்கும். 

இதையும் படிக்க | மூன்றாகப் பிரிகிறது சென்னைப் பெருநகரம்?

 

ADVERTISEMENT
ADVERTISEMENT