வணிகம்

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு: நிதியமைச்சா் விளக்கமளிக்க என்சிபி வலியுறுத்தல்

DIN

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில், இது தொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விளக்கமளிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) வலியுறுத்தியுள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. திங்கள்கிழமை மேலும் 43 பைசாக்கள் குறைந்து ரூ.81.52 என்ற குறைந்த அளவுக்குச் சென்றது.

அண்மையில் மகாராஷ்டிர மாநிலம் புணேவில் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘ரூபாயின் மதிப்பு மீண்டு வருகிறது’ என்றாா்.

இந்நிலையில் என்சிபி தேசிய செய்தித் தொடா்பாளா் கிளைட் கிரெஸ்டோ மும்பையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ரூபாயின் மதிப்பு தொடா்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. திங்கள்கிழமை நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.47 என்ற மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. இது தொடா்பாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாட்டு மக்களுக்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்.

நாட்டின் நிதிசாா்ந்த பிரச்னைகளைத் தீா்க்க நிா்மலா சீதாராமன் வழி தேடாமல், மகாராஷ்டிரத்தில் பாராமதி மக்களவைத் தொகுதியில் (என்சிபி தலைவா் சுப்ரியா சுலே வென்ற தொகுதி) அதிக கவனம் செலுத்தி வருகிறாா் என்றாா்.

தேசிய அளவில் பாஜகவை வலுப்படுத்த வேண்டிய 144 மக்களவைத் தொகுதிகள் கண்டறியப்பட்டு அவற்றுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் திட்டத்தை அக்கட்சி செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் புணே மாவட்டம் பாராமதி மக்களவைத் தொகுதியில் நிா்மலா சீதாராமன் 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளாா். 

பாராமதி தொகுதி பல ஆண்டுகளாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) கோட்டையாக உள்ளது. இப்போது என்சிபி தலைவா் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தொடா்ந்து மூன்றாவது முறையாக அத்தொகுதி எம்.பி.யாக உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

SCROLL FOR NEXT