வணிகம்

ரூ. 8,000 - 12,000-ல் ஜியோ 5ஜி செல்போன்?

27th Sep 2022 10:04 AM

ADVERTISEMENT


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது 5ஜி அலைக்கற்றை ஒரு நல்ல வரம்பை அடைந்தவுடன், ரூ.8,000 முதல் ரூ.12,000 மதிப்புள்ள 5ஜி ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே 4ஜி ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், ஐந்தாவது தலைமுறை தொலைத்தொடர்புக்கு ஈர்த்து, அந்த இத்தில் தனது தலைமையை மேலும் உறுதி செய்துகொள்ளும் வகையில் இந்த திட்டத்தை ஜியோ எடுத்துள்ளது.

இதையும் படிக்க.. ராஜ ராஜ சோழன் யார் தெரியுமா? ஆவேசப் பேச்சால் அசர வைத்த விக்ரம்

தி கௌண்டர்பாயிண்ட் ரிசர்ஜ் நடத்திய ஆய்வில் கிடைத்திருக்கும் தகவலின்படி, லட்சக்கணக்கான 2ஜி வசதிகொண்ட ஸ்மார்ட்ஃபோன் பயனர்களை கூகுளுடன் இணைந்து உருவாக்கிய ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போன் மூலம் 4ஜி நெட்வொர்க்கிற்கு ஈர்த்து, ஏற்கனவே ஜியோ நிறுவனம் செய்த அதே உத்தியை தற்போதும் கையிலெடுக்கப் போகிறதாகக் கூறப்படுகிறது.

ஜியோவின் வளர்ச்சிக்கு இருமுனை உத்தி மிகமுக்கிய பங்கு வகிப்பதாக இருக்கும் வகையில் இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதாவது 5G சகாப்தத்திலும் அதன் தலைமையை நீட்டித்துக்குக் கொள்ளும். மேலும், 2024 ஆம் ஆண்டில், மலிவு விலையில் 5G mmWave+sub-6GHz ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட்ஃபோன் விற்பனையிலும் ஜியோ முதலிடத்துக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT