வணிகம்

இறைச்சிக்கு பதில் பன்னீர் விற்பனை? முதலீட்டாளர்களால் தொழிலதிபருக்கு நேர்ந்த அவலம்

27th Sep 2022 03:56 PM

ADVERTISEMENT

 

இறைச்சி விற்பனை செய்வதற்கு பதில் பன்னீர் விற்பனை செய்தால் முதலீட்டாளர்கள் பணம் தரத் தயாராக இருப்பதாக பிரபல இறைச்சி விற்பனை செய்யும் தொழிலதிபர் தெரிவித்துள்ளார். 

இறைச்சி விற்பனை செய்யும் தொழிலைத் தொடங்கியபோது நிதி ஆதாரத்திற்காக பல முதலீட்டாளர்களிடம் அவமானப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

லீஷியஸ் எனும் இறைச்சி உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் கட்நத 2015ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் அபய் அஞ்சுரா, விவேக் குப்தா ஆகியோரால் தொடங்கப்பட்டது. 

ADVERTISEMENT

பண்ணை முதல் தட்டு வரை என்ற முறையில், ஆடு, கோழி, மீன் போன்ற இறைச்சிகளை வீடுகளுக்கு பயனாளர்களின் ஆர்டரின் பேரில் டெலிவரி செய்து வருகிறது. 

இந்நிலையில், இந்த நிறுவனத்தைத் தொடங்கியபோது ஆரம்பகட்டத்தில் நிதி ஆதாரத்திற்காக கடும் சிரமத்திற்குள்ளானதாக இதன் இணை நிறுவனர் அயய் அஞ்சுரா தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் அவர் பேசியதாவது, சில முதலீட்டாளர்கள் இறைச்சி விற்பனை செய்யும் தொழிலுக்கு பதில், பன்னீர் விற்பனை செய்தால் முதலீடு செய்வதாகத் தெரிவித்தனர். குஜராத்தை சேர்ந்த பெரும் முதலீட்டாளர் ஒருவர் இறைச்சி விற்பனை துறையில் முதலீடு செய்ய விருப்பமில்லை என நேரடியாக வெளியேற்றியதாகவும் குறிப்பிட்டார். 

இறைச்சி விற்பனை செய்யும் ஒரு தொழில் நிறுவனத்தைத் தொடங்குவதற்கு நிதி அடிப்படையில் மட்டுமல்லாமல் நிர்வாக அடிப்படையில் கூட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டதாக அபய் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT