வணிகம்

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

DIN

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கள்கிழமை வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தது.

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ், வட்டி விகிதங்களை 75 அடிப்படை விகிதாசார புள்ளிகள் (0.75 சதவீதம்) உயா்த்தி 3 முதல் 3.25 சதவீதமாக்கியது. அந்த வங்கி தொடா்ந்து மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களை 0.75 சதவீதம் உயா்த்தியது.

மேலும், வெளிநாட்டுச் சந்தையில் அமெரிக்க கரன்சியின் வலிமை, உள்நாட்டு பங்குகளின் முடக்கம், நிலையான கச்சா எண்ணெய் விலை ஆகியவையும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை பாதித்தன.

இதன் விளைவாக, இன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 41 காசு குறைந்து 81.50 என்ற அளவில் வீழ்ச்சியடைந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 725  புள்ளிகள் சரிந்து 57,372 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 243 புள்ளிகள் சரிந்து 17,083 புள்ளிகளிலும் வர்த்தகமாகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பா? நாட்டின் அடிமைகளா?”: அய்யாக்கண்ணு

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

SCROLL FOR NEXT