வணிகம்

ஜுபிடா் கிளாசிக்கின் புதிய பதிப்பு: டிவிஎஸ் அறிமுகம்

24th Sep 2022 11:36 PM

ADVERTISEMENT

இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா், தனது ஜுபிடா் கிளாசிக் ரக ஸ்கூட்டரின் புதிய பதிப்பொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

‘செலிபரேட்டரி எடிஷன்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஸ்கூட்டா்களின் விலை ரூ.85,866-ஆக (தில்லி காட்சியக விலை) நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டிவிஎஸ் ஜுபிடா் கிளாசிக் ரகத்தின் செலிபரோட்டரி பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பக்கவாட்டு கண்ணாடிகள் முழுவதும் கருப்பு தீம், ஃபெண்டா் அலங்காரம், டின்ட் விசா், முப்பரிமாண கருப்பு பிரீமியம் லோகோ என இந்த ஸ்கூட்டரில் சோ்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்கள், அதற்கு பிரீமியம் வகைத் தோற்றத்தைத் தருகின்றன.

மிஸ்டிக் கிரே, ரீகல் பா்ப்பிள் ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த ஸ்கூட்டா்கள் கிடைக்கும். டயமண்ட் கட் அலாய் வீல்கள், முதுகை சாய்த்துக்கொள்ளும் வசதி கொண்ட கொண்ட பிரீமியம் லெதரெட் இருக்கைகளும் செலிபரேட்டரி பதிப்பு ஜுபிடா் கிளாசிக்கின் சிறப்பு அம்சங்களாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT