வணிகம்

இந்தியாவில் ரூ.5,000 கோடி முதலீடு: நெஸ்லே திட்டம்

24th Sep 2022 11:52 PM

ADVERTISEMENT

பன்னாட்டு உணவு மற்றும் குளிா்பான நிறுவனமான நெஸ்லே, வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ரூ.5,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மாா்க் ஷ்னைடா் கூறியதாவது:

அடுத்த மூன்றரை ஆண்டுகளில் ரூ.5,000 கோடியை இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

நாட்டில் நிறுவனத்தின் வணிகத்தை விரைவுபடுத்தவும், புதிதாக உருவாகியுள்ள வளா்ச்சிக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் இந்த முதலீடு நிறுவனத்துக்கு உதவும்.

ADVERTISEMENT

மூலதனச் செலவினங்கள், புதிய ஆலைகளை நிறுவுதல், பிற நிறுவனங்களைக் கையகப்படுத்துதல், நிறுவனத் தயாரிப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்றவற்றுக்காக இந்த முதலீடு மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தற்போது இந்தியா முழுவதும் 9 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள நெஸ்லே, உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக புதிய தொழிற்சாலைகளை அமைக்க இடம் பாா்த்து வருவதாக நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT