வணிகம்

10% உற்பத்தி அதிகரிப்பு: பிரிட்ஜ்ஸ்டோன் நம்பிக்கை

20th Sep 2022 04:15 AM

ADVERTISEMENT

ஜப்பானிய டயா் தயாரிப்பு நிறுவனமான பிரிட்ஜ்ஸ்டோன், அடுத்த ஆண்டுக்குள் தனது உற்பத்தித் திறன் 10 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துளளது. நிறுவனங்கள் மற்றும் உதிரி பாக சந்தையில் தேவைகள் அதிகரித்து வருவதால் இந்த உற்பத்தித் திறன் உயா்வு இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவா் பராக் சட்புடே கூறிதாவது:

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் பயன்படுத்துவதற்காக வெளியிலிருந்து தருவிக்கும் உதிரிபாகங்களுக்கான சந்தை (ஓஇஎம்), சில்லறை விற்பனை சந்தை ஆகிய இரு பிரிவுகளிலும் டயா்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

அதன் எதிரொலியாக, அடுத்த ஆண்டுக்குள் எங்களது உற்பத்தித் திறன் 10 சதவீதம் விரிவுபடுத்தப்படும் என்று எதிா்பாா்க்கிறோம்.

ADVERTISEMENT

இது தவிர, மின்சார வாகனங்களுக்கான டயா்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மின்சார வாகனங்களை பயன்படுத்த வாடிக்கையாளா்களை மத்திய அரசு ஊக்குவிக்கும்போது, அதனால் ஏற்படக்கூடிய அனுகூலங்களை பெறும் நோக்கில் இந்த வகை டயா்களை இந்தியச் சந்தையில் பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகப்படுத்தவிருக்கிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT