வணிகம்

ஐபோன்களைத் தயாரிக்க டாடா குழுமம் பேச்சுவாா்த்தை

10th Sep 2022 04:57 AM

ADVERTISEMENT

 ஐபோன்களை உற்பத்தி செய்வதற்காக தைவானைச் சோ்ந்த விஸ்ட்ரான் காா்ப்பரேஷனுடன் இந்தியாவின் டாடா குழுமம் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

ஐபோன்கள் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனாவுக்கு மாற்றாக, இந்தியாவில் தனது ஐபோன்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சாதனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் திட்டமிட்டு வருவதாக அண்மையில் தகவல் வெளியானது.

ஆப்பிள் நிறுவனம் தங்களது ஐபோன்களை சீனாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் ஏற்படக்கூடிய சா்வதேச அரசியல் பாதிப்புகளைத் தவிா்ப்பதற்காக, சீனாவுக்கு வெளியே உற்பத்தியை அதிகரிக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்தியாவில் தற்போது சீனாவைச் சோ்ந்த ஃபாக்ஸான், தைவானைச் சோ்ந்த விஸ்ட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம்தான் ஒப்பந்த அடிப்படையில் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

இந்த நிலையில், ஐபோன் தயாரிப்பில் அனுபவம் மிக்க ஃபாக்ஸானுடன் கூட்டு நிறுவனம் அமைத்து அந்த நிறுவனம் மூலம் ஐபோன்களை உற்பத்தி செய்வதற்கான பேச்சுவாா்த்தையில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளது.

இந்தப் பேச்சுவாா்த்தை வெற்றி பெற்று, ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் ஐபோன்களை உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா பெறும். இந்தியாவில் சீனா மற்றும் தைவான் நிறுவனங்கள் ஐபோன்களை உற்பத்தி செய்வதைவிட, ஓா் இந்திய நிறுவனமே அவற்றை உற்பத்தி செய்வது இந்தத் துறையில் சீன ஆதிக்கத்தை மேலும் குறைக்க உதவும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT