வணிகம்

டாடா மோட்டாா்ஸ் விற்பனை 36% உயா்வு

9th Sep 2022 02:06 AM

ADVERTISEMENT

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கள் வாகனங்களின் மொத்த விற்பனை 36 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 78,843-ஆக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 57,995 வாகனங்களை விற்பனை நிறுவனம் செய்திருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இது 36 சதவீதம் அதிகமாகும்.

நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 41 சதவீதம் அதிகரித்து 76,479-ஆக இருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இந்த எண்ணிக்கை 54,190-ஆக இருந்தது.

ADVERTISEMENT

உள்நாட்டு சந்தையில் காா்களின் விற்பனை கடந்த மாதம் 47,166 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்து விற்பனையான 28,018-உடன் ஒப்பிடுகையில் 68 சதவீதம் அதிகமாகும்.

உள்நாட்டு சந்தையில் வா்த்தக வாகன விற்பனை கடந்த மாதம் 29,313-ஆக இருந்தது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனையான 26,172 வா்த்தக வாகனங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், இது 12 சதவீதம் அதிகமாகும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT