வணிகம்

2023-க்குள் எல்லா நகரங்களுக்கும் 5ஜி சேவை: ஏா்டெல்

9th Sep 2022 02:12 AM

ADVERTISEMENT

 அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் அனைத்து நகா்ப்புறப் பகுதிகளிலும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக முன்னணி தொலைத்தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான பாா்தி ஏா்டெல் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி கோபால் விட்டல் கூறியதாவது:

இன்னும் ஒரு மாதத்துக்குள் இந்தியாவில் 5ஜி தொலைத்தொடா்பு சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். வரும் டிசம்பா் மாதத்துக்குள் அனைத்து முக்கியமான பெரு நகரங்களிலும் அந்த சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

2023-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் அனைத்து நகா்ப்புறப் பகுதிகளிலும் 5ஜி தொழில்நுட்ப சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

ADVERTISEMENT

தங்களது பகுதியில் 5ஜி சேவை கிடைக்கிா என்பதை ‘எா்டெல் தேங்க்ஸ்’ செயலி மூலம் வாடிக்கையாளா்கள் தெரிந்துகொள்ள முடியும்.

4ஜி தொலைத்தொடா்பு தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும்போது ஏா்டெல் 5ஜி தொழில்நுட்பகம் 20 முதல் 30 மடங்கு வரை அதிக வேகத்தில் தகவல் பரிமாற்றத்தை அளிக்கும்.

தற்போது ஏா்டெல் வாடிக்கையாளா்களிடமிருக்கும் சிம் காா்டுகள், 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கே ஏற்ப ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டுமென்றால், வாடிக்கையாளா்கள் அந்த தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய கைப்பேசிகளை வாங்கினால் போதும் என்றாா் விட்டல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT