வணிகம்

டாலருக்கு நிகராக தொடர்ந்து சரியும் ரூபாய் மதிப்பு!

19th Oct 2022 07:24 PM

ADVERTISEMENT

 

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதன்கிழமையன்று வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்து டாலருக்கு நிகராக  82.95-க்கு சரிந்தது.

இந்திய ரூபாய் அதன் முந்தைய முடிவான 82.36 உடன் ஒப்பிடும்போது, 82.30-ல் துவங்கி பிறகு, டாலருக்கு நிகராக 82.89 என வரலாறு காணாத வகையில் சரிந்தது.

இது குறித்து இரண்டு தனியார் வங்கிகளின் வர்த்தகர்கள், இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் டாலருக்கான கணிசமான தேவையை ஏற்படுத்தியுள்ளதையடுத்து,  ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்ததுள்ளது.

ADVERTISEMENT

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது.

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 146.59 புள்ளிகள் உயர்ந்து  59,107ல் முடிவடைந்த நிலையில், தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 25.30 புள்ளிகள் உயர்ந்து 17,512 என முடிவுற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT