வணிகம்

இந்த 5  ரூபாய் நோட்டு உங்களிடம் உள்ளதா? லட்சக்கணக்கில் பணம் பெறலாம்!

19th Oct 2022 01:14 PM

ADVERTISEMENT

இந்த 5 ரூபாய் நோட்டு இருந்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். இதன் மூலம்  ரூ.35 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம்  வரை பெற முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த 5 ரூபாய் நோட்டில் உள்ள குறிப்புகளை கொண்டு லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த 5 ரூபாய் நோட்டின் சிறப்பு

இந்த 5 ரூபாய் நோட்டு '786' என்ற தொடரில் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த நோட்டின் சிறப்பு. மேலும், இந்த நோட்டில் டிராக்டரின் படம் இருக்க வேண்டும். இப்படி ஒரு நோட்டு இருந்தால், ரூ.2 லட்சம் வரை பெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ன?

ADVERTISEMENT

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள  மிக அரிய ரூபாய் நோட்டுகளை கொண்டு நிறைய பணம் பெறலாம். பல இணையதளங்களில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குவதும், விற்பனை செய்வதும் அதிகமாக உள்ளது. பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்கள் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் படி இருந்தால் நல்ல தொகையைப் பெறலாம்.   

எங்கே விற்கலாம்?

5 ரூபாய் டிராக்டர் அச்சடிக்கப்பட்ட நோட்டுகள் இருந்தால் அதற்கு பதிலாக ரூ.2 லட்சம் வரை பெறலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்காக பல தனியார் நிறுவனங்களில் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனங்களில் பழைய நோட்டுகளுக்கு பதிலாக பல மடங்கு பணம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க: கிரெடிட் கார்டு பேமண்ட் கட்டத் தவறினால் என்ன நடக்கும்?

உங்களிடம் இருக்கும் இதுபோன்ற பழமையயான ரூபாய் நோட்டுகளை, போலி நிறுவனங்களில் சிக்காமல், விசாரித்து நம்பத்தகுந்த இணையதளத்தில் விற்று பயன்பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT