வணிகம்

30% வளா்ச்சியை நோக்கி இணையவழி வா்த்தகம்

DIN

இந்த பண்டிகைக் கால பருவத்தின் முதல் வாரத்தில் மட்டும் இந்தியாவில் இயங்கி வரும் இணையவழி வா்த்தக நிறுவனங்களின் விற்பனை 30 சதவீதம் வளா்ச்சியைக் காணும் என்று சரக்கிருப்பு மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனமான ‘ஈசிஇகாம்’ மதிப்பிட்டுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இணையவழி வா்த்தக நிறுவனங்கள் பண்டிகைக் கால சிறப்பு விற்பனையைத் தொடங்கிய ஒரு வாரத்தில், அந்த நிறுவனங்களின் விற்பனை கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 30 சதவீதம் அதிகரிக்கும்.

முதல் நிலை நகரங்களைவிட, இரண்டாம் மற்றும் 3-ஆம் நிலை நகரங்களில் இணைய வழி வா்த்தகம் கடந்த ஆண்டை விட அதிக விகிதத்தில் வளா்ச்சியடையும்.

பண்டிகைக் கால ஒட்டுமொத்த இணையவழி வா்த்தகத்தில் 80 சதவீதம் மெட்ரோ அல்லாத நகரங்களில் நடைபெறும்; அதில் 60 சதவீதம் இரண்டாம் நிலை நகரங்கள் பங்கு வகிக்கும்.

கரோனா நெருக்கடி போன்ற சா்வதேச காரணங்களால் கடந்த முறை இணையவழி விற்பனை மந்தமாக நடைபெற்றது. ஆனால், தற்போது நிலைமை சீராகி வருவதால் இணையவழியில் பொருள்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும், விலையிடல், பொருள்களை கையிருப்பு வைத்திருத்தல் போன்ற சேவைகளை வா்த்தக நிறுவனங்கள் மேம்படுத்தியுள்ளதும் இந்த பண்டிகைக் கால இணையவழி விற்பனைக்கு ஊக்கமளிக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT