வணிகம்

ரூ. 10,000 வரை தள்ளுபடியில் ஷாவ்மி 5ஜி ஸ்மார்ட்போன் ஆஃபர்! எப்படி?

6th Oct 2022 12:33 PM

ADVERTISEMENT

விஜய தசமி, தீபாவளியை முன்னிட்டு ஆன்லைன் தளங்களும் டிஜிட்டல் நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன. 

அந்தவகையில் ஷாவ்மி 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த ஒரு அதிரடி ஆபரை அறிவித்துள்ளது. 

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். அக். 4 முதல் சென்னை உள்ளிட்ட 4 மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மொபைல் போன் பயனர்கள் தங்களது மொபைலை 5ஜி-க்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த நேரத்தில்தான் ஷாவ்மி, 11டி ப்ரோ (11T Pro) என்ற 5ஜி ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

விழாக்கால சலுகையாக எம்.ஐ. ஸ்டோரில் (mi store) போன் வாங்கினால் ரூ. 1,000 வரை தள்ளுபடி பெற முடியும். பேங்க் ஆப் பரோடா டெபிட்/ கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் ரூ. 7,500 வரை தள்ளுபடியும், மேலும் எக்ஸ்சேஞ்ஜ் ஆஃபரை பயன்படுத்தினால், அதாவது உங்கள் பழைய போனை கொடுத்துவிட்டு புது போன் வாங்கினால் மேலும் 3,000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். 

ஷாவ்மி, 11டி ப்ரோவின் ஆரம்ப விலை ரூ. 34,999 (8 GB + 128 GB). 

8 GB + 256 GB விலை  - ரூ. 36,999

12 GB + 256 GB விலை - ரூ. 38,999

கருப்பு, வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

சிறப்பம்சங்கள் 

6.67இன்ச் அமோல்டி டிஸ்பிளே (2,400*1,080 பிக்சல் தெளிவு)

கார்னிங் கொரில்லா கிளாஸ் 

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் 

3 ரியர் கேமரா (108 +8+5 எம்.பி.), எல்இடி பிளாஷ் 

செல்பி 16 எம்.பி கேமரா  

5,000 எம்ஏஹெச் பேட்டரி, 17 நிமிடங்களில் முழுவதும் சார்ஜ் ஆகிவிடும் 

ஓ.எஸ். - ஆண்டிராய்டு 11 MiUi 12.5

5ஜி ஸ்மார்ட்போன் 

ADVERTISEMENT
ADVERTISEMENT