வணிகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

5th Oct 2022 08:26 PM

ADVERTISEMENT

 

புதுதில்லி: இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலரருக்கு நிகரான இந்திய ரூபாய் மீண்டும் சரிந்து எப்போதும் இல்லாத அளவான ரூ.80.11-ஐ தொட்டது.

காலை 10.43 மணியளவில், ரூபாயின் மதிப்பு 80.02 ஆக வர்த்தகமானது. அதே வேளையில், வெள்ளியன்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 79.87 ஆக இருந்தது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டம் எதிர்காலத்தில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில்,  வட்டி விகித உயர்வுகள் இந்திய ரூபாயின் மீது அதன் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார் ஸ்வஸ்திகா இன்வெஸ்ட்மார்ட்டின் ஆராய்ச்சித் தலைவர் சந்தோஷ் மீனா.

ADVERTISEMENT

குறிப்பாக நிதிச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் ஏற்படும் போது அமெரிக்க டாலர் மற்ற நாணயங்களை பலவீனப்படுத்தும்.

ஜூலை நடுப்பகுதியில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 80க்கும் கீழே சரிந்தது. டாலருக்கான தேவைகளை அதிகரித்தது.

அதே வேளையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல், அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் மத்திய வங்கி பின்வாங்காது என்று கூறியதைத் தொடர்ந்து அமெரிக்க டாலர் மேலும் வலுப்பெற்றது.

இதற்கிடையில் இன்றைய வர்த்தகத்தில், இந்திய பங்குகள் சரிவுடன் வர்த்தகமானது. இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்றைய முடிவில் 1.5 சதவீதம் குறைந்து வர்த்தகமானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT