வணிகம்

டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 9% உயா்வு

DIN

டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த செப்டம்பா் மாதத்தில் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மாதத்தில் நிறுவனத்தில் மொத்த விற்பனை 3,79,011-ஆக உள்ளது. இது முந்தைய ஆண்டின் அதே மாதத்தின் மொத்த விற்பனையோடு ஒப்பிடுகையில் 9 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,47,156-ஆக இருந்தது.

கடந்த மாதத்தில் நிறுவன இருசக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 9 சதவீதம் அதிகரித்து 3,61,729-ஆக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் நிறுவன இருசக்கர வாகனங்களின மொத்த விற்பனை 3,32,511-ஆக இருந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் 2,44,084-ஆக இருந்த உள்நாட்டு இருசக்கர வாகன விற்பனை, இந்த செப்டம்பரில் 16 சதவீதம் அதிகரித்து 2,83,878 ஆகியுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் மக்களவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்

கடலூா் தொகுதியில் 19 வேட்புமனுக்கள் ஏற்பு

தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

கல்லூரியில் மன நல பரிசோதனை முகாம்

4-8 வகுப்புகளின் தோ்வு அட்டவணையில் மாற்றம்

SCROLL FOR NEXT