வணிகம்

சென்செக்ஸ், நிஃப்டி 2% உயர்வு: ஏறுமுகத்தில் வணிகம் நிறைவு

4th Oct 2022 04:55 PM

ADVERTISEMENT


பங்குச்சந்தை வணிகத்தின் இரண்டாம் நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும், நிஃப்டி 300 புள்ளிகளுக்கு மேலும் நிறைவடைந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,276.66  புள்ளிகள் உயர்ந்து 58,065.47 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 2.25 சதவிகிதம் உயர்வாகும்.

படிக்கசெல்போன், கேமரா, ஐ-போன்.... இனி 'டைப் சி' சார்ஜர் மட்டும்தான்!

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 386.95 புள்ளிகள் உயர்ந்து 17,274.30 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 1.82 சதவிகிதம் உயர்வாகும். 

ADVERTISEMENT

பங்குச்சந்தை வணிகத்தில் உள்ள முதல் 30 தர பங்குகளில் 27 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. அதிகபட்சமாக இந்தஸ்இந்த் நிறுவனத்தின் பங்குகள் 5.46 சதவிகிதம் உயர்வுடன் காணப்பட்டன. அதற்கு அடுத்தபடியாக பஜாஜ் பைனான்ஸ் 4.43 சதவிகிதம், டிசிஎஸ் 3.58 சதவிகிதம், பஜாஜ் பின்சர்வ் 3.37 சதவிகிதம், எச்டிஎஃப்சி 2.93 சதவிகிதம் உயர்வுடன் காணப்பட்டன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT