வணிகம்

பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!

4th Oct 2022 12:05 PM

ADVERTISEMENT

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.  

பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. நேற்று (திங்கள்கிழமை) 56,788.81 புள்ளிகளுடன் நிறைவுற்ற மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) 57,506.65 என்ற புள்ளிகளுடன் தொடங்கியது.

காலை 11.59 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1,133.31 புள்ளிகள் அதிகரித்து 57,922.12 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதுபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 346.55 புள்ளிகள் உயர்ந்து 17,233.90 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம்? அதிகம் குடித்தால் என்னவாகும்?

ADVERTISEMENT
ADVERTISEMENT