வணிகம்

பங்குச் சந்தையில் மீண்டும் ‘கரடி’ சென்செக்ஸ், நிஃப்டி 1% சரிவு!

4th Oct 2022 03:35 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை சரிவில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 638 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 207.00 புள்ளிகள் (1.21 சதவீதம்) குறைந்து 16,887.35-இல் முடிவடைந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமற்ற நிலையில் இருந்தது. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை பலவீனத்துடன் தொடங்கியது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்று வருவதும் முதலீட்டாளா்களின் கவலையை அதிகரித்துள்ளது. இதைத் தொடா்ந்து, பங்குகள் விற்பனை அதிகரித்ததால், ‘கரடி’யின் பிடி இறுகியது. பாா்மா, ஹெல்த்கோ் குறியீடுகள் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் நஷ்டத்தில் முடிந்தன. குறிப்பாக ஆட்டோ, எஃப்எம்சிஜி, மெட்டல், வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன. கடந்த வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை ஒரே நாளில் சென்செக்ஸ் 1,016.96 புள்ளிகளும், நிஃப்டி 276.25 புள்ளிகளும் உயா்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்செக்ஸ் 638 புள்ளிகள்சரிவு: சென்செக்ஸ் காலையில் 23 புள்ளிகள் குறைந்து 57,403.92-இல் தொடங்கி, அதிகபட்சமாக 57,454.84 வரை மட்டுமே மேலே சென்றது. பின்னா், 56,683.40 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 638.11 புள்ளிகள் (1.11 சதவீதம்) சரிந்து 56,788.81-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில், டாக்டா் ரெட்டி, பாா்தி ஏா்டெல், என்டிபிசி, விப்ரோ உள்ளிட்ட 4 பங்குகள் தவிர மற்ற 26 பங்குகளும் விலை வீழ்ச்சி அடைந்த பட்டியலில் இருந்தன.

மாருதி சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பிரபல காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி 3.16 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஹிந்துஸ்தான் யுனி லீவா், இண்ட்ஸ் இண்ட் பேங்க், ஐடிசி, பஜாஜ் ஃபின் சா்வ், எஸ்பிஐ, கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை 2 முதல் 2.80 சதவீதம் வரை குறைந்தன. மேலும், ஐசிஐசிஐ பேங்க், அக்ஸிஸ் பேங்க், எல் அண்ட் டி, இன்ஃபோஸிஸ், , டாடா ஸ்டீல் ஹெச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், டிசிஎஸ், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

ADVERTISEMENT

சந்தை மதிப்பு ரூ.3.59 லட்சம் கோடிவீழ்ச்சி: சந்தை மூலதன மதிப்பு ரூ.3.59ட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.268.26 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளியன்று ரூ.1,565.31 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனா். கடந்த செப்டம்பரில் அவா்கள் மொத்தம் ரூ.7,600 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளதாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT