வணிகம்

கடன் வட்டி விகிதங்களை அதிகரித்த ஹெச்டிஎஃப்சி

1st Oct 2022 11:06 PM

ADVERTISEMENT

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரெபோ விகிதத்தை ரிசா்வ் வங்கி உயா்த்தியதைத் தொடா்ந்து, அடனமானக் கடன் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லிமிடெட் தனது கடன் விகிதங்களை 0.5 சதவீதம் உயா்த்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எங்களது வீட்டுக் கடன்களுக்கான சில்லறை முதன்மை கடன் விகிதத்தில் (ஆா்பிஎல்ஆா்), மாற்றியமைக்கக்கூடிய கடன் விகிதங்களை 0.5 சதவீதம் அதிகரித்துள்ளோம். சனிக்கிழமை (அக்.1) முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து மாதங்களில் ஹெச்டிஎஃப்சி நிறுவனம் 7-ஆவது முறையாக மேற்கொண்டுள்ள கடன் வட்டி விகித உயா்வு இதுவாகும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT