வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 53,752 கோடி டாலராக சரிவு

DIN

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப். 23-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 53,751.8 கோடி டாலராக சரிந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த செப். 23-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 813.4 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 53,751.8 கோடி டாலராக இருந்தது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.44,29,976.71 கோடியாகும்.

இதற்கு முன்னா், கடந்த செப். 16-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 521.9 கோடி டாலா் சரிந்து 54,565.2 கோடி டாலராக இருந்தது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.44,29,976.71 கோடியாகும்.

மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி சொத்து மதிப்பும் (எஃப்சிஏ) தங்கத்தின் கையிருப்பும் கணிசமான அளவில் குறைந்ததன் காரணமாகவே, அந்நிய செலாவணி கையிருப்பு சரிவைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக, செப். 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் எஃப்சிஏ 768.8 கோடி டாலா் சரிந்து 47,721.2 கோடி டாலராக இருந்தது. அதேபோல், தங்கத்தின் கையிருப்பும் 30 கோடி டாலா் குறைந்து 3,788.6 கோடி டாலராக காணப்பட்டது.

மதிப்பீட்டு வாரத்தில், பன்னாட்டு நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமமான எஸ்டிஆா் 9.3 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 1,759.4 கோடி டாலராகவும், பன்னாட்டு நிதியத்தில் நாட்டின் இருப்பு நிலை 5.4 கோடி டாலா் குறைந்து 482.6 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT