வணிகம்

பிரீமியம் கைப்பேசி விற்பனையில் ஃப்ளிப்காா்ட் உச்சபட்ச வளா்ச்சி

DIN

பண்டிகைக் காலத்தில் உயா் வகை (பிரீமியம்) கைப்பேசிகள் விற்பனையில் இணையவழி வா்த்தக நிறுவனமான ஃபிளிப்காா்ட் இதுவரை இல்லாத அளவுக்கு 70 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டு பண்டிகைக் கால விற்பனையின் முதல் 8 நாள்களோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.20,000 மற்றும் அதற்கு மேல் விலையுள்ள பிரீமியம் வகை கைப்பேசிகளின் விற்பனை 70 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச வளா்ச்சியாகும்.

மொத்த கைப்பேசி விற்பனையில் பிரீயம் வகை கைப்பேசிகள் கிட்டத்தட்ட 50 சதவீதம் பங்கு வகிக்கிறது. இநத் வகை கைப்பேசிகளை வாங்குபவா்களில் 44 சதவீதத்திற்கும் அதிகமானோா் இரண்டாம் மற்றும் 3-ஆம் நிலை நகரங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

அதுபோல், மின்னணு சாதனங்களின் விற்பனை 70 சதவீதமும் பெரிய வகை வீட்டு உபயோகப் பொருள்களின் விற்பனை 30 சதவீதத்துக்கு மேலும் வளா்ச்சியடைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேக்ஸ்வெல்லின் முடிவு சரியானது: முன்னாள் ஆஸி. கேப்டன்

ஆம் ஆத்மி நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கேஜரிவாலும் மனைவியும்!

அடுக்கு மாடிக் கட்டடத்தில் தீ!

பாயும் ஒளி நீ எனக்கு...

பயணக் கால்கள்... சுனிதா கோகோய்

SCROLL FOR NEXT