வணிகம்

வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே வேலை! 100 நிறுவனங்கள் அறிவிப்பு

30th Nov 2022 04:58 PM

ADVERTISEMENT

 

வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்திற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த 100 நிறுவனங்கள் முதல்கட்டமாக ஒப்புதல் அளித்துள்ளன. 

பணி நாள்கள் குறைக்கப்பட்டதால், ஊதியம் உள்ளிட்ட ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகள் குறைக்கப்படாது என நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. மாறாக ஊழியர்களின் பணிபுரியும் திறன் மேம்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

படிக்ககுஜராத் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் மனு

ADVERTISEMENT

இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்களான ஆட்டோம் வங்கி, உலகளாவிய சந்தைப்படுத்துதல் நிறுவனமான ஏவின் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி அளித்துள்ளன. அந்த நிறுவனங்களில் தலா 450 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 

முதல்கட்டமாக 100 நிறுவனங்கள் 4 நாள்கள், பணிநாள்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதன் 2,600 ஊழியர்களின் பணி நாள்கள் 4 நாள்களாக குறைய வாய்ப்புள்ளது. ஊழியர்களின் பணிநாள்கள் குறைக்கப்படுவதால், ஊழியர்களின் பணிபுரியும் திறன் அதிகரித்து, நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிக்கும் என நம்புவதாக பெருநிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 

படிக்க சென்செக்ஸ் புதிய உச்சம்! 63,000 புள்ளிகளைக் கடந்து சாதனை

ஊழியர்களின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதால், சில மணி நேரங்களின் வித்தியாசத்திலேயே நிர்ணயிக்கப்பட்ட பணிகளை முடிக்க நேருவதாகவும், ஊழியர்களைத் தக்கவைக்க இது சிறந்த முறை என்றும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT