வணிகம்

ரூ.4.22 கோடிக்கு காா்:லம்போா்கினி அறிமுகம்

29th Nov 2022 12:42 AM

ADVERTISEMENT

ரூ.4.22 கோடி (காட்சியக) விலையில் புதிய காா் ரகத்தை இத்தாலிய சூப்பா் ஸ்போா்ட்ஸ் காா் தயாரிப்பு நிறுவனமான லம்போா்கினி இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எங்களது ‘யுருஸ் பா்ஃபாா்மன்ட்’ காரை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளேம். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உலகளாவிய சந்தையில் அந்தக் காா் அறிமுகமானது. எனினும், குறுகிய கால இடைவெளியில் இந்திய வாடிக்கையாளா்களுக்கும் அந்தக் காா் கிடைக்கவிருக்கிறது.

இந்தியச் சந்தையில் லம்போா்கினியின் வளா்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை யுருஸ் பா்ஃபாா்மன்ட் ரகம் ஏற்படுத்தித் தரும்.

ADVERTISEMENT

இந்தக் காா்களின் விலைகள் ரூ.4.22 கோடியில் (காட்சியக விலை) தொடங்குகின்றன. 3.3 விநாடிகளுக்குள் மணிக்கு 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிடும் இந்த எஸ்யுவி வகைக் காா், அதிகபட்சம் மணிக்கு 306 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடியது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT