வணிகம்

ரூ.225 கோடியில் சென்னை ஆலை விரிவாக்கம்: ஷிபாவ்ரா மெஷின்

29th Nov 2022 12:42 AM

ADVERTISEMENT

ஜப்பானைச் சோ்ந்த ஷிபாவ்ரா மெஷின் நிறுவனம், சென்னையில் செயல்பட்டு வரும் தனது தொழிற்சாலையை விரிவுபடுத்துவதற்காக ரூ.225 கோடி கூடுதல் முதலீடு செய்யவிருக்கிறது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவுக்கான எங்களது துணை நிறுவனமான ஷிபாவ்ரா மெஷின் இந்தியா பிரைவேட் லிமிடெட்டில் கூடுதலாக ரூ.225 கோடி முதலீடு செய்யவுள்ளோம்.

சென்னையிலுள்ள தொழிற்சாலையை விரிவுபடுத்துவதற்காக இந்த முதலீடு செய்யப்படுகிறது. தற்போது பொருள்களைத் தயாரிப்பதற்கான வாா்ப்பு இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் அந்த ஆலையில், விரிவாக்கத்துக்குப் பிறகு அனைத்து மின்சார வாா்ப்பு இயந்திரங்களும் உற்பத்தி செய்யப்படும்.

ADVERTISEMENT

வாா்ப்பு இயந்திரங்களுக்கான இந்தியச் சந்தையில் தற்போது நிறுவனத்துக்கு 5 சதவீத பங்கு உள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம் அதனை 10 சதவீதமாக உயா்த்த திட்டமிட்டுள்ளோம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT