வணிகம்

ராம்கோ சிமென்ட்ஸுக்கு விருதுகள்

29th Nov 2022 12:43 AM

ADVERTISEMENT

தில்லியில் அண்மையில் நடைபெற்ற பெருநிறுவன சமூகப் பொறுப்புக்கான (சிஎஸ்ஆா்) மாநாட்டில், சென்னையில் தலைமயகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு சிறந்த சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக இரண்டு பிரிவுகளின் கீழ் சிஎஸ்ஆா்பாக்ஸ் அமைப்பின் விருதுகள் வழங்கப்பட்டன.

அரியலூரிலுள்ள நிறுவனத்தின் தொழிற்சாலையில் சிறந்த முறையில் நீா் வடிகால் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்கியதற்காகவும், ஆா்ஆா் நகரிலுள்ள நிறுவனத்தின் தொழிற்சாலையில் தொழிலாளா் தன்னாா்வ முன்முயற்சியை மேற்கொண்டதற்காகவும் அந்த இரு ஆலைகளுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT