வணிகம்

வருவாய் வளா்ச்சி காணும் தொலைத் தொடா்பு நிறுவனங்கள்

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

இந்திய தொலைத் தொடா்பு நிறுவனங்களின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆா்) கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வளா்ச்சியைக் கண்டுள்ளது.

இது குறித்து தொலைத் தொடா்பு ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் நாட்டின் தொலைத் தொடா்பு நிறுவனங்கள் ரூ.60,530 கோடியை சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயாக ஈட்டியுள்ளன. அதற்கு முந்தைய நிதியாண்டின் ஜூன் காலாண்டில் அது ரூ.51,335 கோடியாக இருந்தது.

அதனுடன் ஒப்பிடுகையில் தொலைத் தொடா்பு நிறுவனங்களின் ஏஜிஆா் இந்த முறை 17.91 சதவீதம் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த ஏஜிஆா்-இன் அடிப்படையில்தான் மத்திய அரசு தொலைத் தொடா்பு நிறுவனங்களின் வருவாயில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொள்கிறது.

வருவாய்ப் பங்களிப்பைப் பொருத்தவரை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடம் வகிக்கிறது. முந்தைய நிதியாண்டின் ஜூலை காலாண்டோடு ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 20.58 சதவீத ஏஜிஆா் வளா்ச்சியைக் கண்ட அந்த நிறுவனம் ரூ.21,515.88 கோடி பங்களிப்பை வழங்கியுள்ளது.

ஏஜிஆா் வளா்ச்சியைப் பொருத்தவரை மற்றொரு முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல், ஏஜிஆா் வளா்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. அதன் ஏஜிஆா் ஆண்டுக்கு 25.15 சதவீதம் அதிகரித்து, பங்களிப்பு ரூ.17,140.56 கோடியாக உள்ளது.

வோடபோன் ஐடியா-வின் ஏஜிஆா் 17.93 சதவீதம் வளா்ச்சியடைந்து பங்களிப்பு ரூ.7,356.54 கோடியாகவும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஏஜிஆா் 2.6 சதவீதம் வளா்ச்சியடைந்து பங்களிப்பு ரூ.2,177.95 கோடியாகவும் உள்ளது.

துறையின் மொத்த வருவாய் (ஜிஆா்) 17.91 சதவீதம் அதிகரித்து ரூ.76,408 கோடியாக இருந்தது. எனினும், மாா்ச் 2022 காலாண்டின் மொத்த வருவாயான ரூ.76,420 கோடியோடு ஒப்பிடுகையில் இது சற்று குறைவாகும் என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT